அரூர் அருகே மகள் சாவில் சந்தேகம்,மருமகன் மீது, மாமனார் கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு, திருமணமாகி நான்கு மாதமே ஆவதால், அரூர் ஆர்டிஓ விசாரணை.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, பாப்பாத்தி தம்பதியினருக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர், இவர்களது இளைய மகள் மீனா(19) கடந்த ஓராண்டுக்கு முன்பு திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அதே கம்பெனியில் பணிபுரிந்த தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தியம், வேலனூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கார்த்திக்கும், மீனாவுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
காதலைத் தொடர்ந்து 4 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தலைஆடிக்கு கொளகம்பட்டி மீனா, வீட்டிற்கு இருவரும் சென்று தங்கி உள்ளனர். அப்பொழுது வரதட்சணை கேட்டு கார்த்திக், மீனாவிடம் சண்டையிட்டாராம், பிறகு இருவரும் சேர்ந்து கார்த்திக் வீட்டுக்கு திரும்பி சென்றனர். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி மீனாவை அவரது அப்பா வீட்டில் 4 நாள் தங்கியிருக்கும்படி, பின்னர் நான் வந்து அழைத்துச் செல்கிறேன் என கூறியுள்ளார். அதற்கு அவரது மாமனார் சுப்பிரமணி காரணம் என்ன என்று கேட்ட பொழுது எனது அம்மா கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்துள்ளார் என்று பதில் தெரிவித்து சென்றாராம்.
மறுநாள் 16 ஆம் தேதியே கார்த்திக், மீனா வீட்டுக்கு நேரில் வந்து மீனாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றாராம். இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மீனா தகப்பனாருக்கு போன் மூலம் உனது மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த சுப்ரமணி தனது உறவினர்களுடன், வேலனூர் கிராமத்திற்கு வந்து பார்த்தபோது மகள் மீனா கழுத்திலிருந்த தாலி, காதில் தோடு, காலில் மெட்டி இல்லாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த சுப்பிரமணி எனது மகள் சாவுக்கு மருமகனே காரணம் என கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார். மீனாவுக்கும், கார்த்திக்கும் திருமணமாகி நான்கு மாதங்களே ஆவதால், அரூர் ஆர்டிஓ முத்தையனுக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment