விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் 59-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரூர் அருகே உள்ள லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லத்திற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மநாபன் ஏற்பாட்டில் முதியவர்களுக்கு உணவு ஒன்றிய செயலாளர் எம் எஸ் மூவேந்தன் தலைமையில் வழங்கப்பட்டது.
இதில் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி சோலைஆனந்தன் பொய்கை மு சுதாகர் ஆசிரியர் சென்னகிருஷ்ணன் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதையடுத்து பொய்யப்பட்டியில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் பொய்கை மு சுதாகர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இதில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட செயலாளர் க வசந்த் மகளிரணி பத்மாமாரியப்பன் ஒன்றிய குழு உறுப்பினர் ரகுநாத் அசி தென்னரசு பொன்னரசன் மாரியப்பன் ஆனந்தகுமார் தீரன்தீர்த்தகிரி இளையராஜா ஆனந்தன் மற்றும் சங்கிலிவாடியில் மகளிரணி பொறுப்பாளர் ஜெயா தலைமையில் அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மொரப்பூரில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் க வசந்த் தலைமையில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகமும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி சேலையும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இதில் மாவட்ட தலைவர் வி டி குமார் நிதிச்செயலாளர் பாலமுருகன் பெப்சிபிரபு அரூர் அம்பேத்கர்நகரில் அரசு ஊழியர் அய்கிய பேரவை மாநில துணை செயலாளர் ப மாதையன் தலைமையில் கொடி ஏற்றி சிலைக்கு மாலை அணிவித்தும் பிறந்தநாள் விழா கொண்டாடினர் இதில் அரசு ஊழியர்கள் க.வசந்த் மு.சிவராமன் சாரங்கபாணி விடுதலைவேலன் இளையராஜா
ராகுல்சித்தார்த் நிகில்வளவன் முருகன் சிறுத்தை ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment