14 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் தந்தை உள்பட 3 பேர் கைது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, August 10, 2021

14 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் தந்தை உள்பட 3 பேர் கைது.

மொரப்பூர் அருகே 14 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் தந்தை உள்பட 3 பேர் கைது.



மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி  (44) கூலித்தொழிலாளி இவரது 14வயது மகள் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காணாமல் போனதாக மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில் சிறுமி திடிரென காவல் நிலையத்திற்கு வந்தார் அவரிடம் போலீசார் விசாரித்ததில் மூர்த்தியின்  14 வயது மகள் என  தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கும் ராசலம்பட்டியை சேர்ந்த ராஜீவ்காந்தி (29) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நைனாகவுண்டம்பட்டியில் ஒரு கோவிலில் சிறுமியின் விருப்பம் இன்றி அவரது தந்தை திருமணம் செய்து வைத்துள்ளாராம் அவரிடம் மூன்று நாட்கள் மட்டுமே வாழ்ந்துவிட்டு சிறுமி தான் ஏற்கனவே காதலித்து வந்த 18 வயது நபருடன் சென்று இரண்டு மாதம் குடும்பம் நடத்தியதும்  தெரியவந்தது இதையடுத்து சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக அவரது தந்தை மூர்த்தி (44) திருமணம் செய்துகொண்ட ராஜீவ்காந்தி (29) உறவினர் செந்தில்(42) ஆகிய மூன்றுபேர் மீது  போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர் சிறுமியின் 18 வயது காதலனை  போலீசார் தேடி வருகின்றனர் சிறுமியை மீட்டு தருமபுரி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment