தருமபுரி தேசிய நெடுஞ்சாலைகளில் சூரிய மின் திட்டம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, August 10, 2021

தருமபுரி தேசிய நெடுஞ்சாலைகளில் சூரிய மின் திட்டம்.

செய்தியாளர் : ஈஸ்வர் ராமநாதன்: 

தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் அவர்கள் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அவர்களை சந்தித்து தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சாலைகளுக்கு இடையில் 60 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலார் பேனல் அமைக்கும் திட்ட வரைவை கொடுத்தார். தேசிய நெடுஞ்சாலைய இரு சாலைகளுக்கு மத்தியில் 60 கிலோ மீட்டருக்கு சோலார் பேனலை பொருத்துவது இதன் நோக்கமாகும் இதற்குப் பெயர் பைலட் ப்ராஜெக்ட் எனவும் வைக்கப்பட்டுள்ளது.

அந்தத் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்  தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்த கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு விரைவில் அனுமதி கிடைத்து செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. இது நடந்தால் தேசிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற புதிய முயற்சி மேற்கொள்ளும் மாவட்டம் என்ற பெயர் நமது மாவட்டத்திற்கு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் சூரிய மின்சாரத்தை ஊக்குவிக்க ஒரு முயற்சியாகவும் இதை பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment