தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 15,000லிருந்து 10,000 கனஅடியாக குறைந்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் குறைந்து கொண்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 10ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் வயநாடு பகுதிகளில் அண்மைக்காலங்களாக தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இரு மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வரும் உபரி நீர் அளவு அதிகரிப்பதும் குறைவதுமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து வரும் நீர்வரத்து நாள்தோறும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது இரு மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் புகையின் அளவு குறைந்துள்ளதால், அதனை தொடர்ந்து அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நொடிக்கு 15 ஆயிரம் கன அடியாகவும், மாலை நிலவரப்படி நீர்வரத்து குறைந்து நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நாளுக்கு நாள் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளான பிரதான அருவி, சினி அருவி,
ஐவார் பாணி ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வரும் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருவதால் நீர் வரத்து அதிகரிப்பின் போது மெல்ல வெளியே தெரிகின்றன. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரின் அளவுகளை பிலிகுண்டுலு பகுதியில் உள்ள மத்திய நீர் அளவிடும் பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவிடும் பணியினை மேற்கொண்டு, கண்காணித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment