மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில் பயணச் சலுகை பறிப்பு, பெட்ரோல் மானியம் கோரி மத்திய அரசை கண்டித்து மொரப்பூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில் பயணச் சலுகை பறிப்பு, பெட்ரோல் மானியம் கோரி மத்திய அரசை கண்டித்து மொரப்பூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பெற்று வந்த ரயில் கட்டண சலுகை பயன்கள் பறிக்கப்பட்டுள்ளது அதை உடனே வழங்கவும்,
சாதாரண காலங்களை விட கூடுதலான கட்டணத்தை செலுத்தி அவசர தேவைகளுக்கு பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளை பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வரவேண்டும். பிளாட்பாரம் கட்டண உயர்வை கைவிட வேண்டும், மின்தூக்கி நகரும் படிக்கட்டுகளால் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர், இதற்கு உடனடியாக மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுச்சேரி, சண்டிகர் யூனியன் பிரதேசங்களில் வழங்குவதை போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோலுக்கு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் மாரிமுத்து உள்பட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்.
No comments:
Post a Comment