ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வித்திட்டம் சார்பில் அரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சினாம்பட்டிக்குடியிருப்புப் பகுதியில் 6 - வயது முதல் 19 வயதுவரையிலான பள்ளிச் செல்லா, இடைநின்றக்குழந்தைகள் மற்றும் 18 வயதிற்குட்பபட்ட மாற்றுத்திறனாளிக்குழந்தைகளைக் கண்டறிவதற்கானக் கணக்கெடுப்புப் பணி நடந்தது.
அரூர் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் திரு.பொன்முடி, துணை ஆய்வாளர் திரு.பொன்னுசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு.விஜயன், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியை திருமதி.தமிழ்ச்செல்வி ஆகியோர் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனர்.
பச்சினாம்பட்டி குடியிருப்புப் பகுதியில் இடைநின்ற மாணவர்களைக் கண்டறியப்பட்டு, மாவட்டத் கல்வி அலுவலர் அவர்களின் ஆலோசனையின்படி, அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை திருமதி.இராணி மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் குடியிருப்புப் பகுதிக்கு நேரில் சென்று 6 மற்றும் 7- ஆம் வகுப்புகளில் மாணவிகளை நேரடியாகப் பள்ளியில் சேர்த்தனர்.
No comments:
Post a Comment