20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வழங்கி தொடங்கி வைத்தார். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 23, 2021

20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வழங்கி தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 281 பயனாளிகளுக்கு ரூ.70.05 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 281 பயனாளிகளுக்கு ரூ.70.05 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.

மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் தையல் இயந்திரம் 32 பயனாளிகளுக்கு ரூ.2,40,000/- மதிப்பிலும், மளிகை கடை, காய்கறி கடை, துணி கடை மற்றும் இதர சிறுதொழில் தொடங்க 98 பயனாளிகளுக்கு ரூ.17,70,000/- மதிப்பிலும், கல்வி உதவித்தொகை 1 பயனாளிகளுக்கு ரூ.20,000/- மதிப்பிலும், மருத்துவ உதவித்தொகை 30 பயனாளிகளுக்கு ரூ.4,94,000/- மதிப்பிலும், கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மளிகை கடை, காய்கறி கடை, துணி கடை மற்றும் இதர சிறுதொழில் தொடங்க 42 பயனாளிகளுக்கு ரூ.7,07,000/- மதிப்பிலும், கல்வி உதவித்தொகை 1 பயனாளிகளுக்கு ரூ.10,000/- மதிப்பிலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறு/குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய நீர்பாசன கடன் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 19 கூட்டுறவு சங்கங்களில் 77 சிறு/குறு விவசாயிகளுக்கு மானியத் தொகையாக ரூ.37,64,500/-ரூ மதிப்பிலும்,என மொத்தம் 281 பயனாளிகளுக்கு ரூ.70,05,500/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார். ஏனைய பயனாளிகளுக்கு துறை அலுவலர்கள் மூலம் வழங்கப்படும். 

தருமபுரி மாவட்டத்தின் நல் உள்ளம் படைத்த நன்கொடையாளிகளிடமிருந்து பெறப்பட்ட நன்கொடை மற்றும் அரசிடமிருந்து வரப்பெற்றுள்ள இணை மான்ய தொகையின் மூலம் நலத்திட்ட உதவிகள் தற்போது பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனை பயனாளி பெருமக்கள் நன்முறையில் பயன்படுத்தி தங்களது வருவாயை பெருக்கி தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திகொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளிடம் தெரிவித்தார். 

இந்நிகழ்வின் போது, இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கம்) திரு.இராமதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.அய்யப்பன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் திரு.பழனிமணி, உதவி பொது மேலாளர் திரு.பழனிசாமி, மேலாளர் திரு.இளங்கோ ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment