விவசாய தொழிலாளர்களின் குடும்ப அட்டைகளை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அட்டைகளாக மாற்ற கோரி ஆர்ப்பாட்டம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 23, 2021

விவசாய தொழிலாளர்களின் குடும்ப அட்டைகளை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அட்டைகளாக மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்.

விவசாய தொழிலாளர்களின் குடும்ப அட்டைகளை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அட்டைகளாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி  விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழகத்தில் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் உள்ளனர் அவர்களது குடும்ப அட்டை வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என அந்த குடும்ப அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது(NPHH) அதனால் நியாயவிலை கடைகளில் பல்வேறு பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது அரிசியின் அளவு குறைந்தே கொடுக்கப்படுகிறது எனவே விவசாய தொழிலாளர்களின் உடைய குடும்ப அட்டைகளை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அட்டைகள் என வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பென்ன விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விரவி தலைமை வகித்தார் கரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விரவி தலைமை வகித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி மாதன் பென்னாகரம் பகுதி குழு செயலாளர் கே அன்பு வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆ ஜீவானந்தம் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ரஜினி உள்ளிட்டோர் உரையாற்றினர் நிறைவாக 300க்கும் மேற்பட்ட மனுக்களை வட்டாட்சியரிடம் வழங்கி கோரிக்கையை எடுத்துரைத்தனர்

No comments:

Post a Comment