வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு AAY குடும்ப அட்டை வழங்கக்கோரி போராட்டம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, August 18, 2021

வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு AAY குடும்ப அட்டை வழங்கக்கோரி போராட்டம்.

பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு AAY குடும்ப அட்டை வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்.

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் மாற்றுத்திறனாளிகள் இணைந்து கொள்வது என்ற திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசின் நுகர்வோர் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அலுவலக குறிப்பு படி மாற்றுத்திறனாளிகளை வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்பவர்களாக ஏற்று அந்த்யோகா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் தமிழ் மாநில அரசும் NPHH மற்றும் PHH ரேஷன் கார்டுகளை மாற்றி AAY குடும்ப காடுகளாக மாற்றி மாதந்தோறும் 35 கிலோ அரிசியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக இன்று பெண்ணாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அந்த்யோதா அன்ன யோஜனா மைய அரசின் திட்டப்படி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு AAY குடும்ப அட்டை வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உறுப்பினர்களுக்கான சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment