தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் காசி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயவேலு, சென்னகேசவன் ஆகியோரிடையே வீட்டிற்கு செல்லும் வழிப் பாதையில் இன்றுவரை தொடர்ந்து பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி காசி மகன் செந்தில் அவரது வீட்டின் அருகில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த ஜெயவேலு, சென்னகேசவன் ஆகியோர் செந்திலை தகாத வார்த்தையால் திட்டி அவரது கழுத்து, தலைப்பகுதியில் தாக்கியுள்ளனர்.
பலத்த காயமடைந்த செந்திலை சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து காசி கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயவேலு, சென்னகேசவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 11 மணி அளவில் சிகிச்சை பலனின்றி செந்தில் உயிரிழந்தார். சம்பவம் அறிந்த அரூர் போலீசார் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் மாற்றம் செய்து கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment