விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, August 27, 2021

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி காட்சி மூலம் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.08.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காணொளி காட்சி மூலம் விவசாயிகளிடம் பேசும் போது தெரிவித்தாவது :

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 866.2மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2021) தற்போது வரை 468.6மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. நடப்பு காரீப் பருவத்தில் 66956 ஹெக்டேர் பரப்பில் வேளாண்மைப் பயிர்கள் மற்றும் 47834 ஹெக்டர் பரப்பில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு 175.8 மெட்ரிக் டன் நெல்,சிறுதானியங்கள்,பயறு வகைகள் மற்றும் நிலக்கடலை சான்று விதைகள் விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சான்று விதைகள் 232.95 மெட்ரிக் டன் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 8208 மெட்ரிக் டன் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்கள் 39.366 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

41.60 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையினை தவறாமல் செலுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனிற்காகவும், விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை விவசாய பெருங்குடி மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார். கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் திருமதி. ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் காணொளி காட்சி (Google Meet App) மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி காட்சி (Google Meet App) மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.வசந்தரேகா, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் திரு. இராமதாஸ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.இளங்கோவன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.மோகான்தாஸ் சௌமியன், துணை இயக்குநர் (புள்ளியல்) திரு.பன்னீர்செல்வம், மத்தியகூட்டுறவு வங்கி பொது மேலாளர் திரு.பழனிமணி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.மாது உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment