அதிகாரிகளின் அலட்சியத்தால் அவதிப்படும் கிராம மக்கள், ஆட்சியர் நேரடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, August 28, 2021

அதிகாரிகளின் அலட்சியத்தால் அவதிப்படும் கிராம மக்கள், ஆட்சியர் நேரடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

அரூர் வட்டம் கொளகம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை 18.07.2021 அன்று இரவு 11 மணிக்கு பொன்னுசாமியின் குடும்பத்தார் பொதுவழியை கற்களை கொட்டி பொதுவழியை அடைத்துவிட்டதாகவும், இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியார், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டதின் விளைவாக 07.08.2021 அன்று இரு தரப்பினரையும் அழைத்து சமதான பேச்சுவார்த்தை நடத்தினர், அனால் அதில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

மீண்டும் பொன்னுசாமியின் குடும்பத்தார் 15.08.2021 அன்று இரவு கூடுதலாக கற்களை கொட்டி மீண்டும் ஆராஜகத்தில் ஈடுபட்டதாகவும், மீண்டும் அரசு அதிகாரிகளிடம் இது குறித்து முறையிட்டதின் காரணமாக 18.08.2021 அன்று காவல்துறையின் உதவியுடன் பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமிருந்து 07.08.2021 தேதியிட்டு கடிதம் ஊராட்சி மன்ற தலைவருக்கும், பொன்னுசாமிக்கும் கிடைக்கப்பெற்றது.

ஆனால் 18.08.2021 அன்று கடிதத்தில் குறிப்பிட்டது போல எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எனவே கிராமமக்கள் 23.08.2021 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாக மனு அளித்ததின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. சித்ரா அவர்கள் வரும் 27.08.2021 அன்று உறுதியாக ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதி அளித்தார்.

அரூர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் 23.08.2021 தேதியிட்ட கடிதத்தில் வரும் 27.08.2021 தேதியில் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என ஊராட்சி மன்ற தலைவருக்கு கடிதம் கிடைத்தது, நேற்று 27.08.2021 அன்றும் அதிகாரிகள் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே ஊர் பொதுமக்கள் அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்கால் எண்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, மாவட்ட ஆட்சியர் அவர்கள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்க கேட்டுக்கொண்டுள்ளனனர்.

No comments:

Post a Comment