கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மாநில சிறப்பு செயற்குழுக் கூட்டம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, August 28, 2021

கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மாநில சிறப்பு செயற்குழுக் கூட்டம்.

கடகத்தூர் பகுதியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மாநில சிறப்பு செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. 

தர்மபுரி மாவட்டம் கடகத்தூர் லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் நந்தகுமார், மாவட்ட செயலாளர் சாம்ராஜ், மாவட்ட பொருளாளர் தீர்த்தகிரி, மாவட்ட துணைத் தலைவர் ரவி, மாவட்ட அமைப்பு செயலாளர் முனுசாமி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் தாமோதரன், தலைமை வகித்தனர் இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் சுரேஷ் அவர்கள் தலைமையில் மாநில செயலாளர் பரமசிவம், மாநில பிரச்சார செயலாளர் ஜார்ஜ், மாவட்ட தலைவர் நந்தகோபால், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மூர்த்தி, ஆகிய முன்னிலையில் நடைபெற்ற மாநில சிறப்பு செயற்குழு கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் மாநில சங்க ஆலோசனை கருத்துக்களின் அடிப்படையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

கிராம நிர்வாக அலுவலர்கள் பணி பழைய அமைப்புகள் பணிகளிலிருந்து  மாறுபட்டு தற்போது முழு அரசு பணியாக மட்டுமின்றி பேரிடர் மேலாண்மை துறையின் களப்ணியாகவும் கணினி மற்றும் இணையதள சேவை மூலம் இயங்கிக் கொண்டிருப்பதால்  வளர்ந்து வரும் அறிவியல் மாற்றங்களுக்கேற்ப செயல்பட வேண்டியிருப்பதாலும்  தற்போது உள்ள 10ஆம் வகுப்பு கல்வி தகுதி பணியாற்ற இயலாது என்பதால் கல்வி தகுதி பட்ட படிப்பு கல்வி தகுதியாக உயர்த்த வேண்டுகிறோம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment