அரூர் பஸ் நிலைய நவீன பொது கழிப்பிடத்தில் கூடுதல் கட்டண வசூல், நிர்வாகமே நடத்த கோரிக்கை.
அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் அமைந்துள்ள அரசு நவீன கழிப்பிட கட்டிடம், பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக செயல்பட்டு வருகிறது. இதற்காக வருடா வருடம் பொது ஏலம் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஏலத்தில் பங்கேற்கும் நபர்களுக்கு அரசு சட்டத்திற்கு உட்பட்ட விதிமுறை வாசகம் அச்சிடப்பட்ட நோட்டிஸ் மற்றும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திய பின்னர் பொது ஏலம் நடைபெற்றும் .
இதற்கான ஏலம் மார்ச் மாதத்தில் மூன்று ஏலமாக நடைபெறும். ஏலத்தில் கடந்த ஆண்டு ஏலம் போன தொகையில் இருந்து 15 சதவீதம் கூடுதலாக ஏலம் கூறப்படும். அதற்கு மேல் அதிக லாபம் தரும் தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு டெண்டர் விடப்பட்டும். ஏலம் எடுத்த ஒப்பந்தக்காரர்கள், நவீன கழிப்பிடத்ததை பயன்படுத்த வரும் பொதுமக்களிடம், ஒரு நபர் சிறுநீர் கழிப்பதற்கு 50 பைசாவும், மலம் கழிப்பதற்கு ஒரு ரூபாய் என்று வசூலிக்க ஒப்புக்கொண்டு பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே அவர்களுக்கு ஓராண்டு குத்தகைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால் பொதுக் கழிப்பிடத்தை பொது மக்கள் பயன்படுத்த உள்ளே சென்றால் ரூ. 5 என்று கட்டாய வசூல் செய்யப்படுகிறது. எதிர்த்துக் கேள்வி கேட்ப்பவர் தாக்குதலுக்கு உள்ளாகிரார். வெளியே ஒரு நபருக்கு ஐந்து ரூபாய்யும், உள்ளே பணிபுரியும் நபருக்கு தனியாக தொகையை வசூல் செய்து வருகின்றனர்.
இதை எதிர்த்து கேள்வி கேட்கும் பொது மக்களிடம் தினசரி வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடைபெற்று வருகிறது. அப்பாவி பஸ் பயணிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றது. சரியாக பராமரிக்காத காரணத்தால் அடிக்கடி செப்டிக் டேங்க் நிறைந்து கட்டிடத்தின் பின்புறம் கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியை குடியிருந்து வரும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு நவீன கழிப்பிட குத்தகைதாரர் நடவடிக்கையை கண்காணித்து, அவர்களது குத்தகை காலத்தைத் நீக்கம் செய்து, பேரூராட்சி நிர்வாகமே நவீன கழிப்பிட கட்டிட வசூலில் ஈடுபட வேண்டும். என்பதே பஸ் பயணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கையாக மாவட்ட நிர்வாகத்திற்கு வைத்துள்ளனர். மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment