மொரப்பூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நீர் பரிசோதனை பயிற்சி முகாம்.
இன்று மொரப்பூர் BDO அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கிராம குடிநீர் சுகாதார குழுக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான நீர் பரிசோதனை பெட்டியின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியை மதிப்பிற்குரிய மொரப்பூர் ஒன்றிய குழு பெருந்தலைவர்(சேர்மன்) திருமதி சுமதி செங்கண்ணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் ரகோத்சிங், மொரப்பூர் BDO ஆனந்தன், உதவி நிர்வாக பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். "நீர் பகுப்பாய்வு ஆய்வாளர்கள் சிவசக்தி மற்றும் முகேஷ் செயலாக்கம் கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியை RDS தொண்டு நிறுவன இயக்குனர் திரு. தர்மலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு நீர் ஆதாரம் பகுப்பாய்வு பற்றி அறிந்து கொண்டனர்.இறுதியில் RDS ஒருங்கிணைப்பாளர் திருமதி லட்சுமி நன்றி கூறினார்.


No comments:
Post a Comment