தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 16, 2021

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதிய மாற்றத்தை அமல்படுத்திடக்கோரி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில பொதுச் செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். இதில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் அனைவருக்கும், ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். மேலும், இந்த ஊழியர்களுக்கு வருங்கால வைப்புநிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நடமாடும் நம்பிக்கை மையம் மற்றும், குருதி வங்கிகளில் பணிபுரியும் டிரைவர், உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீடு  திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக, தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதை கைவிட  வேண்டும்.
இவ்வாறு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்க, தர்மபுரி மாவட்ட மைய தலைவர் சிவக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மணி உள்பட, பலர் இதில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment