பென்னாகரத்தில் தொல் திருமாவளவன் பிறந்தநாள் விழா. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 16, 2021

பென்னாகரத்தில் தொல் திருமாவளவன் பிறந்தநாள் விழா.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியின்  சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு  நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் குண்டு சரவணன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிவாஜி, ஆட்டோ நாகராஜ், இளையராஜா, அறிவழகன், சூரி,

சர்தார், விண்முரசு சிவசங்கர், கார்த்திக், அருண், சந்திரன் உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment