செக்கோடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் இலாபகரமாக கறவை மாடு வளர்ப்பு முறைகள் பயிற்சி.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரம், செக்கோடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் இலாபகரமாக கறவை மாடு வளர்ப்பு முறைகள் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடத்தப்பட்டது.
பாலக்கோடு வட்டார அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி.சித்ரா அவர்கள் பயிற்சியினை துவக்கி வைத்து பேசினார். குண்டல்பட்டி கால்நடை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் திரு.விஜயகுமார் அவர்கள் இலாபகரமாக கறவை மாடு வளர்ப்பு முறைகளான தரமான கறவை மாடு தேர்வு, தீவன மேலாண்மை மற்றும் தாது உப்பு பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளித்தார்.
செக்கோடி கால்நடை ஆலோசகர் திரு.முல்லைவேந்தன் அவர்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் மடிவீக்கம், ஜீரணகோளாறு, அம்மை நோய் மற்றும் குடற்புழு நீக்கம் ஆகியவற்றிக்கு இயற்கை முறையில் முதல் உதவி வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
இப்பயிற்சிக்கு அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி.மகேஷ்வரி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னேற்பாடுகள் செய்தனர்,
மேலும் இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்டவிவசாயிகள் கலந்துகொண்டுபயன்பெற்றனர். வேளாண்மை உதவி இயக்குநர் பாலக்கோடு.
No comments:
Post a Comment