சுகாதார துறை சார்பாக கிராமங்களில் பள்ளி மாணவர்கள் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, August 7, 2021

சுகாதார துறை சார்பாக கிராமங்களில் பள்ளி மாணவர்கள் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம்.

மொரப்பூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கிராமங்களில் கொரானா விழிப்புணர்வு.

தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கே. அக்ரஹாரம் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று பள்ளிச் சிறுவர்கள்  கொரானா விழிப்புணர்வு  செய்தனர்.

முககவசம் அணிய வேண்டும், சோப்பு போட்டு கைகளை  சுத்தமாக கழுவ வேண்டும்,சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கொரானா தடுப்பூசி போடவேண்டும் , என்று பள்ளிமாணவர்கள் ஊர்வலம் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இக்கூட்டத்தில் வட்டார மருத்துவர் மற்றும் மொரப்பூர் அரசு மருத்துவர்அவர்களின் அறிவுறுத்தலின்படி மொரப்பூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக சுகாதார ஆய்வாளர் ஆனந்தகுமார், சுகாதார செவிலியர் காந்தரூபினி, பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், கே அக்ரஹாரம் அரசு பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி, உதவிஆசிரியர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இந்திய ராணுவம் தீ.திருப்பதி மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற பள்ளிச் சிறுவர்கள் இக்கூட்டத்தில்கலந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

No comments:

Post a Comment