சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் பகுதிகளில் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஆய்வு.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பகுதியை கடந்து செல்லும் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கட்ட மேடு பகுதியில் ஏற்படும் சாலை விபத்துக்கலால் உயிரிழப்புகள் அதிக அளவு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தொப்பூர் மலை பாதையில் உள்ள வளைவு பாதைகளை சீரமைத்து விபத்து இல்லாத பாதையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
தொப்பூர். மலைப் பாதையை சீரமைக்க மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வுசெய்து 393 கோடி ரூபாய் செலவில் வளைவான பாதையை நேரான பாதையாக மாற்ற திட்டம் தயாரித்துள்ளனர். இன்று தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் எல்என்டி அலுவலர்களுடன் விபத்து ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து புதியதாக திட்டமிடப்பட்டுள்ள பாதை குறித்து கேட்டறிந்தார். விரைவில் புதிய பாதையை அமைக்க சென்னையில் உள்ள அதிகாரிகளை சந்தித்தும் டெல்லி சென்று மத்திய தரைக் வழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்து வலியுறுத்த இருப்பதாக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment