தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்து பொய்யப்பட்டி கிராமத்தில் தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் கிணற்றில் விழுந்தது.
அரூரை அடுத்த பொய்யப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் சண்முகசுந்தரம் என்பவரின் விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றில் மான் தண்ணீர் தேடிவந்து கிணற்றில் விழுந்துவிட்டது. இதனையடுத்து தீர்த்தமலை வனச்சரக அலுவலர் திரு. பெரியண்ணன் அவர்களின் உத்தரவுப்படி வன காவலர்கள் சிவா, ஜீவானந்தம், சுரேஷ் மற்றும் அகில இந்திய திருவள்ளூர் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ. சி.தென்னரசு அழகேசன் சமூக ஆர்வலர் வெ.சுரேஷ் மற்றும் வனவிலங்கு ஆர்வலர் செ. நந்தகிருஷ்ணன் ஆகியோர் அந்த மானை உயிருடன் மீட்டு வேடகட்டமடவு பீட் கட்டரசம்பட்டி காப்புக் காட்டில் பத்திரமாக விட்டனர்.
No comments:
Post a Comment