பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டம்! - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, August 29, 2021

பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டம்!

பென்னாகரம் அருகே பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டம்.

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் பருவதன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரங்காடு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எரங்காடு பிரிவிலிருந்து நடுநிலை பள்ளி வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ளது. இதனால் இந்த சாலை பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.இதனால் கிராம மக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் தொடர்ந்து ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தனர். இது நாள் வரையில் சாலை சீரமைக்க படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையில் நாற்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரேஷன் மற்றும் ஆதார் கார்டுகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பதாக போராட்டக்காரர்கள் கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment