தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை இன்று (17.08.2021) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குருபர அள்ளி ஊராட்சியில் 13 -வது நிதிக்குழு மான்யத்தில் குருபர அள்ளி முதல் கொட்டாபுளியனூர் வரை ரூ.24.7 இலட்சத்தில் நடைபெறும் சாலைப்பணியினையும், குருபர அள்ளி ஊராட்சியில் 14 - வது நிதிக்குழு மான்யத்தில் கொட்டாபுளியனூர் முதல் துரிஞ்சிப்பட்டி வரை ரூ.14.87 இலட்சத்தில் நடைபெறும் சாலைப்பணியினையும், இராமியண அள்ளி ஊராட்சியில் PMGSY திட்டத்தில் மேக்கல் நாய்க்கனப்பட்டி முதல்பூதநத்தம் சாலை வரை ரூ.173.60 இலட்சத்தில் நடைபெறும் சாலைப்பணியினையும், இராமியண அள்ளி ஊராட்சியில் கனிம வளம் திட்டத்தின் கீழ் ரூ.9.99 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளிக் கிணறு ஆழப்படுத்துதல் பணியினையும், SCPAR 2020-21 திட்டத்தின் கீழ் ரூ.309.60 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அனைத்து பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் குறிபிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர்கள் திரு. ராமசந்திரன், திரு. ஜெகதிஷ், உதவிப் பொறியாளர்கள் திரு. முருகேசன், திரு. அரவிந்த் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) திரு.கே.ரங்கநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திரு. வெ.பரவிச்சந்திரன் , பணிமேற்பார்வையாளர்கள் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment