தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்து சட்டையம்பட்டி என்ற குக்கிராமம் உள்ளது இக்கிராமம் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டத்திற்கும் எல்லைப் பகுதியாக அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார போக்குவரத்து பணிமனையிலிருந்து U6 என்ற ஒரே ஒரு பேருந்து மட்டும் இக்கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தது ஊரடங்கு காரணமாக இயங்காமல் நின்ற பேருந்து தொடர்ந்து இயங்காமல் நின்றுவிட்டது. இதனால் அக்கிராமத்தில் உள்ள நோயாளிகள், முதியோர்கள் , கர்ப்பிணி பெண்கள், பல்வேறு வகையான தினக்கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் மற்றும் கிராம மக்கள் பேருந்து வசதி இல்லாமல் பெரும்சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக தருமபுரி போக்குவரத்து பொது மேலாளர், ஊத்தங்கரை போக்குவரத்து பணிமனை மேலாளர் ஆகியோர்களிடம் பல முறை தகவல் அளித்தும் இதுவரை எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை என்று அக்கிராம சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இயங்காமல் இருக்கும் பேருந்தை தொடர்ந்து இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அக்கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
No comments:
Post a Comment