அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் வாகனங்களில் கொண்டு செல்பவர்கள் மீது எடுக்கப்படும் குற்றவியல் நடவடிக்கை தொடர்பாக வரப்பெற்ற அரசு ஆணை குறித்த மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு.
சாதாரணக்கற்கள், மண், கிராவல், களிமண், சரளை மண், மண், மணல், கிரானைட் போன்ற சிறுகனிமங்களை அரசு அனுமதியின்றி வெட்டி எடுப்பவர்கள் மீதும், அனுமதியின்றி வாகனங்களில் எடுத்துச் செல்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப., அவர்கள் எச்சரிக்கை.
சாதாரணக்கற்கள், மண், கிராவல், களிமண், சரளை மண், மண், மணல், கிரானைட் போன்ற சிறுகனிமங்களை அரசு அனுமதியின்றி வெட்டி எடுப்பது, அனுமதியின்றி வாகனங்களில் எடுத்துச் செல்வது மற்றும் ஒரே நடைச்சீட்டை பலமுறை பயன்படுத்துவது ஆகியன குற்றம் ஆகும்.
எனவே, அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுத்துச் செல்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுத்திட அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் போது, கைப்பற்றப்படும் வாகனங்கள், கனிமங்கள், கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும் கருவிகள், இந்த குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் மற்றும் உடந்தையாக உள்ளவர்கள் மீது கைப்பற்றுகை அலுவலரால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குற்றவியல் நடைமுறைகள் தொடரப்படும். இந்நேர்வில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அரசு ஆணை எண்.170(எம்.எஸ்) தொழில் (எம்.எம்.சி-2) துறை நாள்:05.08.2020-ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், நீதிமன்ற இறுதி உத்தரவின் பேரில் மட்டுமே கைப்பற்றப்படும் வாகனங்கள், கனிமங்கள் மற்றும் கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகியன விடுவிக்கப்படும். எனவே, அனுமதியின்றி கனிமம் வெட்டியெடுத்து வாகனத்தில் கொண்டு செல்லும் குற்ற செயலுக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் கனிமம் மற்றும் சுரங்கம் (மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன்படி அபராதம் மற்றும் சிறைதண்டனை வழங்கப்படும் எனவும் மற்றும் கனிமக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது மாவட்ட நிர்வாகத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment