கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே செம்பரசனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பீளாலம் கிராமத்தின் வழியாக பல கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமங்களுக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சூளகிரி பேரிகை வழித்தடத்தில் பீளாலம் கிராம பஸ் நிறுத்தம் தற்போது பழுதடைந்த நிலையிலும், இழுத்து விழும் நிலையில் தற்போது உள்ளது. மேலும் பஸ் நிறுத்தம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ளதால் எந்த பயணிகளும் நிழல் கூடம் அருகே நிற்பதில்லை .
தற்போது பயணிகள் நிழல் கூடம் சீரமைக்கப்படுமா என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment