மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, August 24, 2021

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் செயலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத்தலைவர்/ தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் இன்று (23.08.2021) நடைபெற்றது. 



இக்கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத்தலைவர் / தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ். செந்தில்குமார் அவர்கள் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது.

தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்கான நிதிகளை ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒதுக்கீடு செய்து வழங்கி வருகின்றன. அரசின் திட்டங்கள் மூலம் மாவட்டத்தின் வளர்ச்சியும், மக்களுக்கான வளர்ச்சியும் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

அத்தகைய அரசின் திட்டங்களை துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி சிறப்பாக பணிகளை நிறைவேற்றிட வேண்டும். அவ்வாறு அத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் உடனடியாகமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கோ, இக்குழுத்தலைவராகிய என்னிடமோ தெரிவித்தால் அதற்குரிய தீர்வையும் கண்டறிந்து அத்திட்டத்தினை காலதாமதமின்றி நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் துறை அலுவலர்கள் முனைப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத்தலைவர்/ தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ். செந்தில்குமார் அவர்கள் தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் பணியாகும். ஒன்றிய அரசின் திட்டப்பணிகளை செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து, அதற்கான தீர்வு கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஒன்றிய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2020-21- ஆம் நிதியாண்டிற்கான கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் 2019-2020 மற்றும் 2020-2021 நிதியாண்டுகளுக்குரிய திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்), பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம முன்னோடி வளர்ச்சித் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தன்னிறைவுத் திட்டம், ஆதிதிராவிடர் குக்கிராமங்களில் அடிப்படை வசதிகள், மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு, தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம், பொது சேர்ம ஒப்படைக்கப்பட்ட வருவாய் கூறு திட்டம், கல்வித்துறையின் சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம், கூட்டுறவுத்துறை பொது சேவை மையங்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டம், தேசிய நில அளவை ஆவணங்கள் நவீன மயமாக்கள் திட்டம், பேரூராட்சிகள் துறை, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள், தேசிய மதிய உணவுத்திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத்திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மருத்துவ நலப்பணிகள், சுகாதார நலப்பணிகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களின் செயலாக்கம், முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

ஊரக இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., மாவட்ட வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.முத்துசாமி, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.மலர்விழி, இணை இயக்குநர் (வேளாண்மை) திருமதி. வசந்தரேகா, முதன்மை கல்வி அலுவலர் திரு.து.கணேஷ்மூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு. இளங்கோவன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் திரு. அசோகன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.சவுண்டம்மாள், துணை இயக்குநர் (தோட்டக்கலை) திருமதி.மாலினி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் திரு.பன்னீர் செல்வம், உதவி இயக்குநர் ஊராட்சி திரு. சீனிவாச சேகர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் திரு.சி.சுப்பிரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி. செண்பகவள்ளி, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி பியூலா ஜேன் சுசிலா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திரு.பாபு, தருமபுரி நகராட்சி ஆணையர் திருமதி. சித்ரா சுகுமார் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment