வழக்குரைஞர் வீட்டில் நகைத் திருட்டு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 9, 2021

வழக்குரைஞர் வீட்டில் நகைத் திருட்டு.

அரூரில் வழக்குரைஞர் வீட்டில் நடந்த நகைத் திருட்டு சம்பவம் குறித்து போலீஸார்  வழக்குப் பதிந்துள்ளனர். அரூர் திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் எம். இளங்கோ (51). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு  வீட்டை பூட்டிவிட்டு, வீரப்பநாய்க்கன்பட்டியில் உள்ள தமது தந்தையை பார்க்க சென்றிருந்தாராம். இதையடுத்து, தனது வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க மோதிரம், செயின், தோடு உள்பட சுமார் 10 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

இது குறித்து வழக்குரைஞர் எம்.இளங்கோ அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் லட்சுமண தாஸ் தலைமையில், தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். திருட்டு சம்பவம் நடந்த வீட்டில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்தனர். இது குறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

No comments:

Post a Comment