மான் வேட்டையாடிய நபருக்கு 25 ஆயிரம் அபராதம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 9, 2021

மான் வேட்டையாடிய நபருக்கு 25 ஆயிரம் அபராதம்.

 அரூர் அருகே மான் வேட்டையாடிய நபருக்கு 25 ஆயிரம் அபராதம்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பையர்நாயகன்பட்டி கிராமம் காட்டு கொட்டாய் பகுதியில் வசித்து வரும் துரைச்சாமி மகன் அர்ஜுனன் (50) என்பவர் மானை வேட்டையாடி வீட்டில் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தை அடுத்து தீர்த்தமலை வனச்சரக அலுவலர் திரு k. பெரியண்ணன் தலைமையில் வனக்கப்பாளர்கள் N. ஜீவானந்தம், S. சிவா, K. சுரேஷ், C. மகேஷ் குமார் மற்றும் வனக்காவலர் V. ராஜேஸ்வரி ஆகியோர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று   மான் வேட்டையாடிய நபரை  பிடித்து மான் கறியை பறிமுதல் செய்தனர். 

பின்பு தருமபுரி மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவு படி அபராதக் கட்டணமாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

No comments:

Post a Comment