மொரப்பூர் மற்றும் அரூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அரூர் வட்டாட்சியர் அலுவலக எதிரே இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் பி.குமார் தலைமை வகித்தார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களை பாதிக்கும் 4 சட்ட தொகுப்புகளையும் ரத்து செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு தலா 200 நாள் வேலையும், நாள் ஒன்றுக்கு ஊதியமாக ரூ. 600 ம் வழங்க வேண்டும். காவிரியில் ஓடும் மிகைநீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நிரப்ப வேண்டும். அரூர் வட்டாரப் பகுதியில் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் ஜெ.பழனி, அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயல் தலைவர் அரூர் சி.அன்பழகன், மோட்டார் வாகன ஓட்டுநர் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் என்.எம்.எஸ். முருகேசன், சிஐடியு மாவட்ட துணைச் செயலர் சி.ரகுபதி, விவசாயிகள் சங்க மாவட்ட பொருளர் எஸ்.கே.கோவிந்தன், ஒன்றிய செயலர் வி.ஆறுமுகம், ஒன்றிய தலைவர் எம்.தங்கராஜி, துணைத் தலைவர் கே.என்.ஏழுமலை, மாவட்டக்குழு உறுப்பினர் பி.வி.மாது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி ஒன்றிய செயலர் தங்கராஜ் தலைமை வகித்தார். இதில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் எம்.முத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரா.சிசுபாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment