கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சீதா பழங்கள் விற்பணை படுஜோர்.
பழங்கள் என்றால் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, வாழை போன்றவைதான் நினைவுக்கு வரும். சீஸன் பழங்கள் எல்லாம் அந்த நேரத்துக்கு மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் சில பழங்களை மட்டுமே எதிர் நோக்க தொடங்குவோம். அதில் முக்கியமானது மாம்பழமும், சீத்தாப்பழமும். சீஸன் வரும் போதே அதன் சுவையை ருசிக்க தொடங்கிவிடுவோம்.
சீதாப் பழத்தில் வைட்டமின் பி வளமாக உள்ளது. இச்சத்து மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைக்கும் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை அண்டாமல் பாதுகாக்கும். சீதாப் பழம் கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ஏனெனில் இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மன அழுத்தத்தினால் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் தினமும் தூங்க செல்வதற்கு முன் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டுப் வந்தால் மன அழுத்தம் குறைந்து ஆழ்ந்த தூக்கம் உண்டாகும். இதற்க்கு காரணம் இப்பழத்தில் அடங்கியுள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் தாதுப் பொருட்கள்தான். இவை இரண்டிற்குமே மன அழுத்தத்தை கட்டுபடுத்தும் தன்மை உண்டு.
சீதா பழத்தில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் நம் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தருகிறது. சீதாப் பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய், மாரடைப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலை சின்னார் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் பல கடைகள் இயங்கி வருகின்றன. பல வாகன ஓட்டிகள் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பயணிகள் சீதா பழத்தை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
சூளகிரி அருகே வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில் அதிகம் சீதா செடிகள் காணப்படுவதால் இயற்கையாகவும் சுவையாகவும் இந்த பழம் இருக்கிறது என பழத்தை வாங்கும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment