இரத்து பத்திரம் (CANCELLATION DEED) தெரிந்து கொள்ள வேண்டிய 21 அம்சங்கள்.
- ஒரு பத்திரத்தை உருவாக்குகிறோம் அந்த பத்திரம் தேவையில்லை என்று உணரும் பட்சத்தில் அதனை வேண்டாம் என்று இரத்து செய்வதை ஒரு பத்திரம் எழுதி இரத்து செய்வதை இரத்து (cancellation deed)என்கிறோம்.
- எந்த சொத்து வாங்கினாலும் இரத்து பத்திரம் அந்த சொத்தினுடைய ஆவணங்களில் இருந்தால் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்.
- சட்ட குழப்பங்கள் சட்டதடைகள் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
- பொதுவாக ஆவணங்களை இரத்து செய்யகூடிய ஆவணம் இரத்து செய்ய முடியாத ஆவணம் என இரண்டாக பிரிக்கலாம்.
- இரத்து செய்யமுடியாத ஆவணங்களை போலியாகவோ மோசடியாகவோ தவறான ஆவணங்களை வைத்து தாக்கல் செய்யபட்டு இருந்தால், உரிமை இல்லாதவர்கள் எழுதி கொடுத்து இருந்தால், அதனை நீதிமன்றம் மூலமாக அணுகி இரத்து செய்யலாம்.
- இரத்து செய்ய கூடிய பத்திரங்கள்:
- கிரய ஒப்பந்த பத்திரம்
- பொது அதிகாரம் மற்றும் சிறப்பு அதிகார பத்திரம்
- உயில் பத்திரம்
- கிரய ஒப்பந்தம் சார்பதிவகத்தில் பதிவு செய்யபட்டு இருக்கிறது .ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகள் படி நடக்காவிட்டாலும், சொன்ன கெடு தேதியில் கிரயம் முடிக்காததாலும், மேற்படி கிரய ஒப்பந்தத்தை இருவரும் சேர்ந்து சார்பதிவகத்தில் இரத்து பத்திரம் எழுதி இரத்து செய்யலாம்.
- பொது அதிகார பத்திரம் சிறப்பு அதிகார பத்திரமோ எழுதி கொடுத்தவர் எப்பொழுது வேண்டுமானாலும் அதிகாரத்தை ரத்து பத்திரம் எழுதி கேன்சல் செய்ய உரிமை உண்டு!
- பொது அதிகார பத்திரத்தில் இரத்து செய்ய முடியாத பவர்பத்திரம் என்று எழுதிவிட்டாலும் (irrevocable power of attorney) அதனை ரத்து செய்யலாம். இரத்து செய்யமுடியாது என்று பத்திரத்தில் எழுதுவதால், அதனை ரத்து செய்யமுடியாது என்பது அல்ல. எழுதி வாங்குபவர் மற்றும் எழுதி கொடுப்பவரின் மன நம்பிக்கைகாக மட்டுமே, இரத்து செய்யமுடியாது ( irrevocable) என்ற வாரத்தை பயன்படுத்த படுகிறது.
- உண்மை நிலவரத்தில், பணம் கைமாறு எதனையும் பெறாமல் இருந்தால்தான் அது பொது அதிகாரம் பத்திரம், அதனை இரத்து செய்யலாம். ஆனால் சொத்தை கிரயத்திற்காக கைமாறு பெற்று கொண்டு, பதிவு செய்யாத கிரயம் எழுதி கொண்டு, சார்பதிவகத்தில், பொது அதிகாரம் எழுதி கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
- கைமாறு பெற்று கொண்டு கைமாறு பெறவில்லை என்று பவர் பத்திரம் எழுதி பதிந்து விட்டு, அதனை இரத்து செய்ய நினைக்கின்றவர்கள் இருக்கிறார்கள்.பதிவு துறை அந்த பவர் பத்திரத்தை இரத்து செய்துவிடும்.ஆனால் நீதிமன்றத்தில் கைமாறு பெற்றது நிரூபிக்கபட்டால், இரத்து பத்திரம் கேன்சல் ஆகிவிடும் என்பதை நினைவில் கொள்க.
- உயில் பத்திரம் எழுதி பதிவு செய்து விட்டால் அதற்கு பிறகு அதனை இரத்து பத்திரம் எழுதி இரத்து செய்து விட்டு புதிய உயில் எழுதலாம்.எவ்வளவு உயில் வேண்டுமானலும் ஒருவர் எழுதலாம். எவ்வளவு தடவை வேண்டுமானாலும் இரத்து பத்திரம் எழுதி ரத்து செய்யலாம்.
- கிரயபத்திரத்தை எழுதிவிட்டு அதனை இரத்து செய்ததை (Cancellation of Sale Deed) நான் நிறைய பார்த்து இருக்கறேன்.சார்பதிவகத்திலும் இந்த இரத்து பத்திரத்தை பதிந்து இருப்பார்கள். ஈசியிலும் இரத்து பத்திரத்தின் Entry காட்டி இருக்கும்.
- மிக மிக அதிகமாக, தான செட்டில்மெண்டு பத்திரத்தை கண்டிசனுடன் கூடிய செட்டில்மெண்டு, கண்டிசன் இல்லாத செட்டில்மெண்டு, இரண்டையும் இரத்து பத்திரம் எழுதி இரத்து செய்ததையும் பார்த்து இருக்கிறேன்.ஈசியிலும் இரத்து பத்திரம் என்டரி வரும்.
- ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வந்த புதிதில் கிரய பத்திரம் செட்டில்மெண்டு பத்திரம் எல்லாம் இரத்து செய்யலாம் என்று நம்பி இருந்தேன்.நாளாக நாளாக நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பில் செட்டில்மெண்டு இரத்து செல்லாது என்ற டிகிரியை பார்க்க ஆரம்பித்தேன்.
- அப்பொழுதான் தெரிந்தது பதிவு துறைக்கும், ரத்து பத்திரத்தை பொருத்தவரை பதிவுதுறையும் நீதிதுறையும் ஒரே நேர்கோட்டு புரிதலில் இல்லை என்று.
- பல தீர்ப்புகள் செட்டில்மெண்டு பத்திரம் ரத்து செல்லாது என்று நீதிமன்றம் கொடுத்தாலும், பதிவுதுறை செட்டில்மெண்டு பத்திரம் ரத்து பத்திரத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தது.
- சமீபத்தில்தான் பதிவு துறை செட்டிலமெண்டு பத்திரங்களை இரத்து செய்வதில்லை.ஆனாலும் இன்று வரை பலர் தங்கள் சொத்துக்களில் செட்டில்மெண்டு இரத்து பத்திரத்தை தாய்பத்திரங்களில் ஒன்றாக வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
- கிரயபத்திரம்,செட்டில்மெண்டு பத்திரம்,பாகபிரிவினைபத்திரம்,விடுதலை பத்திரம்,பரிவர்த்தனை பத்திரம் என எந்த பத்திரங்களையும் இரத்து பத்திரம் எழுதி, அதனை சார்பதிவகத்தில் பதிந்து, மேற்படி பத்திரங்கள் இரத்து செய்யபட்டன என்று சொன்னால் நம்பாதீர்கள்.
- அதுவே ஆள்மாறாட்டம் செய்த கிரயபத்திரம்,தவறான ஆவணங்கள் தாக்கல் செய்து உருவாக்கபட்ட பத்திரங்கள்,பங்குதாரர்களில் ஒருவருக்கு மட்டும் அநீதியாக பாகம் கிடைத்த பாகபிரிவினை பத்திரம்,மோசடி பத்திரங்கள், சட்டத்திற்கு புறம்பான பத்திரங்கள் என பதிவு செய்யபட்ட அனைத்து பத்திரங்களையும் நீதிமன்றத்தில் வழக்காடிதான் இரத்து செய்யமுடியும்.
- ஆரம்ப கால கட்டங்களில் பத்திரபதிவுகள் நீதிமன்ற பதிவாளர் முன்பு தான் நடந்தது.பிறகு பத்திரபதிவு துறையை பிரித்து தனியாக இயங்க வைத்தது. அப்பொழுது நீதிமன்றம் பதிவுதுறைக்கு பதிவு செய்யும் அதிகாரம் மட்டுமதான் கொடுத்து இருக்கிறது. சட்டத்திற்கு புறம்பான பத்திரங்களை இரத்து செய்யும் அதிகாரம் இன்னும் நீதிமன்றம் தான் வைத்து இருக்கிறது என்று புரிந்து கொள்ளல் வேண்டும்.
No comments:
Post a Comment