பேரிடர் நிகழ்வுகளில் அரசுடன் இணைந்து செயல்பட விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வரவேற்கப்படுகிறது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, August 18, 2021

பேரிடர் நிகழ்வுகளில் அரசுடன் இணைந்து செயல்பட விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வரவேற்கப்படுகிறது.

பேரிடர்களை கையாள்வதற்காக தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களிலிருந்தும் பல்வேறு திறன்களைக் கொண்ட தன்னார்வலர்கள் TNSMART என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு தங்கள் விவரங்கனை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் அளிக்க கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், கடந்த 05.07.2021 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பேரிடர் மேலாண்மையில் சமூகத்தில் உள்ள மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது வலியுறுத்தியுள்ளார். அதன்படி, பேரிடர்களை கையாள்வதற்காக அனைத்து குக்கிராமங்களிலிருந்தும் பல்வேறு திறன்களைக் கொண்ட தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் விவரங்கள் TNSMART என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் இப்பணியில் சமூகத்தில் உள்ள மக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் அனைத்து குக்கிராமங்களிலிருந்தும் “கணினி இயக்குபவர், ஓட்டுநர், எலக்ட்ரிசியன், கால்நடை பராமரிப்பவர், மருத்துவ உதவி செய்பவர், புகைப்பட கலைஞர், பிளம்பிங் வேலை செய்பவர், பாம்பு பிடிப்பவர், நீச்சல் தெரிந்தவர், மரம் அறுப்பவர், தட்டச்சு செய்பவர்" போன்ற திறன்கள் கொண்ட தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து தங்களுடைய பெயர் மற்றும் இதர விவரங்களை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் பேரிடர் நிகழ்வுகளில் அரசுடன் இணைந்து செயல்பட விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் தங்களுடைய விவரங்களை சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment