பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கை கழுவுதல் குறித்து விப்புணர்வு நிகழ்ச்சி. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 2, 2021

பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கை கழுவுதல் குறித்து விப்புணர்வு நிகழ்ச்சி.

அரூர் பேரூராட்சி நிர்வாகம் சாரபில் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கை கழுவுதல் குறித்து விப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷிணி அவர்களின் உத்தரவின்படி அரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்து நிலைய வளாகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு  வருவாய் கோட்டாட்சியர் முத்தையன் தலைமையில்  விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது. 

அரூர் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையம், வணிக வளாக கடைகள், சந்தை பகுதி உள்ளிட்ட இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கை கழுவுதல், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டன. அப்போது கை கழுவுதல் குறித்து சுகாதார துறை சார்பில் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் முறையில் அறிவுறுத்தப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இருச்கர வாகனங்களில் விழிப்புணர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.


பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி, துப்புரவு ஆய்வாளர் சிவகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிகளில் வட்டாட்சியர் கனிமொழி, வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியன், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் இளவரசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கருனாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment