வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் - மக்கள் நீதி மய்யம் மனு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 2, 2021

வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் - மக்கள் நீதி மய்யம் மனு.

வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறு நாளான இன்று பொதுமக்கள் மனு அளித்துவரும் நிலையில். மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மகாத்மா காந்தியின் கனவான கிராம சுயாட்சி காக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்க வதற்காக பல்வேறு களப்பணிகள் கருத்தரங்கங்கள் முன்னெடுத்துள்ளோம் குறிப்பாக கிராம ஊராட்சி அமைப்பின் வேரான கிராமசபை விழிப்புணர்வுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம் இந்த அடிப்படையில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

ஏழு நாட்களுக்கு முன்பாக கிராமசபை கூட்டத்திற்கு அழைப்பு தருவது, கிராம சபையில் முன் வைக்கப்பட வேண்டிய கிராம ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகங்கள், தணிக்கை அறிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவேண்டும், கிராம நலன் கருதி மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் ஆனது முறையாக தீர்மானங்களாக பதிவு செய்யப்படுதல் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெய வெங்கடேசன் மற்றும் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

No comments:

Post a Comment