பென்னாகரம் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 2, 2021

பென்னாகரம் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7 தேதி வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது அதன்படி 2 ஆம் நாளான இன்று  02.08.2021 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை பெண்ணாகரம் வட்டாரம் மற்றும் பென்னாகரம் பேரூராட்சி சார்பாக பென்னாகரம் பேருந்து நிலையத்தில்  கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் , மற்றும் பொது மக்களுக்கு கை கழுவும் முறைகள் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் எடுத்து கூறப்பட்டது கை கழுவும் முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.

முக கவசம் கட்டாயம் போட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டது மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது இந்த விழிப்புணர்வு  பணியில் தாசில்தார் , BMO , Eo, BHS சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள், FYRC தன்னார்வலர்கள் மற்றும் பெண்ணாகரம் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment