பென்னாகரம் பேரூராட்சியில் தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
பென்னாகரம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி, கசடு கழிவுநீர் அகற்றுதல் மேலாண்மை திட்டம், ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை ஆகியவற்றை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
மேலும் வணிக நிறுவனங்களை ஆய்வு மேற்கொண்டு கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்றும் சேகரமாகும் குப்பைகளை சாலைகளிலும் வடிகால்களிலும் கொட்டாமல் தரம்பிரித்து பேரூராட்சி பணியாளர்கள் வசம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார், பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து பேரூராட்சி பணியாளர்களிடம் வழங்கி குப்பையில்லா பேரூராட்சியாக மாற்ற பேரூராட்சி நிர்வாகத்திற்கு உதவி புரியுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
பேரூராட்சியில் உள்ள குடிநீர் விநியோக பணியாளர்களுக்கு குடிநீரை தினசரி குளோரினேசன் செய்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வராத வண்ணம் குடிநீர் வினியோகம் செய்ய அறிவுரை வழங்கினார் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மீட்பு பூங்காவில் ஆய்வு செய்து மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பதையும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
இதில் பேரூராட்சி அலுவலக செயல் அலுவலர் சித்திரை கனி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் விஜய் சங்கர், பெண்ணாகரம் பேரூராட்சி அலுவலர் திருமதி கீதா, இளநிலை பொறியாளர் பழனி, மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் குடிநீர் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment