தருமபுரி மாவட்டம்,பாப்பாரப்பட்டியில், சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா நினைவு மண்டப வளாகத்தின் ஒரு பகுதியில் புதிதாக கட்டப்ட்டுள்ள பாரதமாதா நினைவாலயத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதன் திறந்து வைத்தார், இதனை தொடர்ந்து நூலக கட்டிடடத்தையும் திறந்து வைத்த அமைச்சர், மறைந்த தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின் நினைவு மண்டத்திற்கு சென்று மலர்த்தூவி மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்,சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின் நீண்ட நாள் கனவாக பாரதமாதா கோயில் திறக்கப்ட்டிருக்கிறது.
கடந்த மூன்றாடுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது, மறைந்த முதல்வர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தான் தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின் நினைவு மண்டபம், நூலகம் அமைக்கபெற்று 2011 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது
நினைவாலயத்தை மேம்படுத்த என்ன தேவை இருக்கிறதோ,அதை அறிந்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அது நிறைவேற்றப்படும் என்றார்.
No comments:
Post a Comment