தருமபுரி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் நூலகங்களை பயன்படுத்திக்கொண்டு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று தருமபுரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.” மாவட்ட மைய நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தருமபுரி மாவட்ட மைய நூலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, நூலகத்தில் உள்ள அலமாரிகள், புத்தகங்கள், பதிவேடுகள் சிறப்பாக பராமரிக்க வேண்டும். வாசகர்களின் வருகையை அதிகரிக்க முனைப்பு காட்டவேண்டும். அதற்கு நூலகர்கள் வாசிப்பு மற்றும் கற்றல் திறனை மேம்படுத்திக் கொண்டு வாசகர்களின் தேவையை அறிந்து பூர்த்தி செய்திட வேண்டும். வாசகர்களின் மன ஓட்டத்துக்கு தேவையான நூல்கள் நூலகத்தில் இருந்தால் அதனை வாசிக்க பரிந்துரைக்கவேண்டும். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் நூலகம் வருவதற்கு தேவையான உத்திகள் புதிய புதிய அணுகு முறைகளை நூலகர்கள் கையாள வேண்டும் என மாவட்ட நூலக அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்,
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் வாசகர்களுடன் அமர்ந்து கலந்துரையாடினார். அப்போது, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மாவட்டத்தில் உள்ள நூலகங்களை பயன்படுத்திக்கொண்டு இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெறும் வகையில் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு உயர் பணியிடங்களுக்கு அதிகளவில் தேர்ச்சி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்திக்கொள்ளும் அதேவேளையில் மாற்று ஏற்பாடாக பிற பணிகளிலும் பணியாற்றும் வகையில் ஏதேனும் ஒரு துறையில் பணியாற்றிக்கொண்டே போட்டித்தேர்விற்கு தயார் படுத்திக்கொள்ளும் வகையில் தங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்.
முன்னதாக புதிதாக வரப்பெற்ற நூல்களை, மாவட்ட மைய நூலகத்தில் இருந்து கிளை மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் என மொத்தம் 15 நூலகங்களுக்கு 14,066 புதிய நூல்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு பரிசாக கிடைக்கப்பெற்ற 30 நூல்களை மாவட்ட மைய நூலக பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட நூலக அலுவலரிடம் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட நூலக அலுவவர் திருமதி.ஆனந்தி, மாவட்ட முதல் நிலை அலுவலர் மாதேஷ் வட்டாட்சியர் திரு.ராஜராஜன் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment