குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கேரளாவை சேர்ந்த திரு.விமல் அவர்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தை தொடங்கி உள்ளார். நேற்று அவர் தருமபுரி வந்தடைந்தார்.இதுவரை 500 கிலோமீட்டர் கடந்து விட்டார், இன்னும் 3500 கிலோமீட்டர் நடைபயணம் உள்ளது. இன்று அவரது நடைபயணத்தை தருமபுரியில் இருந்து தொடங்க உள்ளார். தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் காவல்துறையினர், கல்லூரி பேராசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நகர காவல் ஆய்வாளர் திரு.சரவணன்,
உதவி காவல் ஆய்வாளர் திரு.முருகேசன், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.சின்னசாமி, கல்லூரி நிர்வாக அலுவலர் கணேஷ், மை தருமபுரி சதீஸ் குமார், பாலச்சந்திரன், அருணாச்சலம் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அவருக்கு மருதம் நெல்லி கல்வி குழுமம் தாளாளர் Dr.K.கோவிந்த் அவர்கள் விமல் அவர்களின் விழிப்புணர்வு நடைபயணம் இந்தியா முழுவதும் சென்றடைந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment