சித்தேரி மலை கிராம மலைவாழ் மக்களுக்கு அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்.
மலை கிராம பகுதிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி அறிவுறுத்தலின்படி பல்வேறு துறை அரசு அதிகாரிகள் நேற்று முன்தினம் அரூர் அருகே சுமார் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள சித்தேரி மலை கிராம பகுதியில் மலைவாழ் மக்களுக்கு அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
இந்த விழிப்புணர்வு முகாமை இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனம், தர்மபுரி மாவட்ட தொழில் மையம், மற்றும் அரூர் சீனிவாசா சேவைகள் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இம்முகாமில் வங்கி, தொழில் மையம், தாட்கோ, தோட்டக்கலை, வேளாண், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், ஊரக வளர்ச்சி திட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். சித்தேரி பகுதியில் காளான், தேனீக்கள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. அதற்குத் தேவையான அரசு வழங்கும் உபகரணங்கள் மானியம் மற்றும் இலவசம் குறித்த அரசு திட்டங்களை எடுத்துரைத்தனர்.
எட்டாம் வகுப்பு வரை படித்த, படிக்காதவர்கள் மற்றும் ஐடிஐ, பாலிடெக்னிக், படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க அரசு வழங்கும் நிதி, மானியம் குறித்த திட்டங்கள், மற்றும் விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டுநீர், விவசாய இடுபொருட்கள், இலவச செடிகள்
வழங்குவது குறித்தும், மகளிர் குழுக்கள் பாக்கு தட்டு தயாரிப்பது மற்றும் பல்வேறு சிறு தொழில்கள் எவ்வாறு தொடங்குவது என்பது பற்றியும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment