நம்ம ஊரு சுகாதராமாக இருக்கவேண்டும் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 9, 2021

நம்ம ஊரு சுகாதராமாக இருக்கவேண்டும் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு.

நம்ம ஊரு சுகாதராமாக இருக்கவேண்டும் - பென்னாகரத்தில் கொ.க. மணி.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர், பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக மாநில தலைவருமான ஜி.கே. மணி ஆய்வு மேற்க்கொண்டார். குப்பைகள், சாக்கடைகள் அள்ளப்படாத பகுதிகளில் தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய பேருராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நம்ம ஊரு நல்லாயிருக்கனும், நம்ம ஊரு சுகாதாரமாக இருக்கவேண்டும். நம்ம ஊரில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். நம்ம ஊரில் எல்லோருக்கும் குடிநீர் கிடைக்கவேண்டும். என்கிற நோக்கத்தில் பென்னாகரம் பேருராட்சி பகுதிகளில் வீதி வீதியாக சென்றுகொண்டிருப்பதாகவும் செல்கின்ற இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ள, சாக்கடைகள் அள்ளப்படாமல் உள்ள பகுதிகளில் பேருராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உடனடியாக குப்பைகள் அகற்ற கூறியதாகவும். தூய்மை பணிகள் சரிவர நடைபெற்று வருகிறதா அனைத்து தெருக்களிலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வருகிறதா என ஆய்வு மேற்க்கொண்டதாக தெரிவித்தார். நம்ம ஊரு நால்லா இருக்கனும் என்ற உணர்வு அனைவருக்கும் வரவேண்டும். என கேட்டுக்கொண்டார். அடுத்து பாப்பாரப்பட்டி பேருராட்சியில் ஆய்வு மேற்க்கொண்டார். 

இந்நிகழ்ச்சியின் போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.    பி. வெங்கடெஷ்வரன், பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட தலைவர் செல்வகுமார், தொகுதி அமைப்பு செயலாளர் சுதாகிருஷ்ணன், இளைஞர் சங்க மாநில துணை தலைவர் சத்தியமூர்த்தி பேரூராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment