மாரியம்மன் கோயிலில் தங்கம், வெள்ளி நகை, உண்டியல் திருட்டு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, August 22, 2021

மாரியம்மன் கோயிலில் தங்கம், வெள்ளி நகை, உண்டியல் திருட்டு.

அரூரில் ஊஞ்சல் மாரியம்மன் கோயிலில் தங்கம், வெள்ளி நகை, உண்டியல் திருட்டு, போலீசார் விசாரணை.
தர்மபுரி மாவட்டம் அரூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் அருள்மிகு ஸ்ரீ ஊஞ்சல் மாரியம்மன் கோயில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. இந்த கோயிலின் பூசாரி பரிமளா கடந்த வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத பூஜைக்காக அம்மன் அலங்கரித்து பூஜை செய்துவிட்டு  நகைகள் கோயிலிலேயே வைத்துவிட்டு சொல்றாராம் மறுநாள் சனிக்கிழமை கோயிலில் பூஜை செய்துவிட்டு,  ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி பூஜை செய்துவிட்டு நகைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று விடலாம் என்று கோயிலை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் பௌர்ணமி பூஜை செய்வதற்கு வந்த போது கோயில் கதவு திறந்திருந்தது அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கோயிலின் மேற்கூரை, உள் கதவு, 2 பீரோகள் உடைக்கப்பட்டது தெரியவந்தது. கோயிலில் வைத்திருந்த சாமி நகைகள் தங்ககாசுமாலை, 300 தங்க குழல்கள், தங்க மூக்குத்திகள், 2 வெள்ளி ஒட்டியானம், 180 வெள்ளி தாலி குழல், வெள்ளி முக கவசம், பஞ்சலோக முக கவசம்  திருட்டுப் போனது.
மேலும் கோயில் உண்டியல்,  நவகிரக சிலைகள் அமைப்பதற்காக வைத்திருந்த ரூ. 30,000 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. தகவலறிந்து அங்கு கூடிய ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து கோயில் பூசாரியிடம் கேட்டபோது சுமார் 27பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ. 30,000 ஆயிரம் திருட்டு போனதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment