10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, August 22, 2021

10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  அழிந்துவரும் பனைமரங்களை மீட்டெடுக்கும் வகையில் கட்டிகாணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட  ஏரிக்கரையோரம்  பல்வேறு இடங்களில் 10, ஆயிரம் பனைவிதைகள் நடும் விழா நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதூர் ஏரி கரை மற்றும் தரிசு நிலங்களில் கிருஷ்ணகிரி ரோட்டரி கிளப்  மற்றும் கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்தும் இணைத்து அழிந்துபோகும் நிலையில் உள்ள பனைமரங்களை காப்பாற்றும் வகையிலும் ஏரிக்ரையோரங்களை பலப்படுத்தும் வகையில் முதல் கட்டமாக  புதூர் ஏரிக்கரையில் சுமார் 3,000 பனை விதை நடும் விழா நடைபெற்றது,

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக  கட்டிகாணப்பள்ளி ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் திருமத. காயத்திரி தேவி கோவிந்தராஜ் கலந்துக்கொண்டு புதூர்  ஏரிக்கரையில் பனை மரம்விதை விதைக்கும் பணியினைத் துவக்கிவைத்தார்
.
மேலும் பனைமரங்களின் பயன்கள் மட்டுமின்றி பனைமரங்களால் ஏற்படும் பாதுகாப்பு குறித்து நம்முடைய இளைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்ளும் வகையிலும், அழியும் நிலையில் உள்ள பனைமரங்களை மீட்டுடெடுக்கும் வகையில் தரிசு நிலங்கள் மட்டுமின்றி அனைத்து ஏரிகளிலும் சுமார் 10 ஆயிரம் பனைமரம் விதைக்கள் நடவு செய்ய இருப்பதாக ரோட்டரி கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மோலும் இந்தத் துவக்கவிழாவின் போது ரோட்டரி கிளப் நிர்வாகிகளான திருமதி சங்கீதா,  எச் என் வி சுரேஷ், பிரேம்குமார் ,  விஜி,  சித்ரா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிஅதிமுக கார்த்திகேயன்
கட்டிகாணப்பள்ளி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், பால்ராஜ், மெரூன் ஆமீத்,  ஒப்பந்ததாரர் புதூர் ராஜா, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment