ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ஒன்றிய தலைவர், உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, September 2, 2021

ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ஒன்றிய தலைவர், உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம்.

பெண்ணாகரம் ஏரியூர் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில், அதிமுக துணைத் தலைவர் உட்பட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு.

ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை  ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு  ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி தலைமையில்  நடைபெற்றது. ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 12 ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏரியூர் ஒன்றிய குழுவின் தலைவராக அதிமுகவை சேர்ந்த பழனிச்சாமியும் ஒன்றியக்குழு துணைத் தலைவராக அதே கட்சியைச் சேர்ந்த தனபால் துணை தலைவராகவும் உள்ளனர். இருவருக்குமிடையே நிர்வாக ரீதியிலான பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இரண்டு குழுவாக செயல்படுகின்றன.

இந்நிலையில் ஒன்றிய குழு தலைவர் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் எனவும், பல்வேறு திட்டப் பணிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக என கூறி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தலைமையில் 6 உறுப்பினர்கள் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனையெடுத்து அதிமுகவை சேர்ந்த ஒன்றிய குழு துணைத் தலைவர் உட்பட திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் 6 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல் மக்கள் பணியில் ஈடுபடாமல் உறுப்பினர்களை ஒன்றிணைத்து திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கு இடையூறாக உள்ளதாக ஒன்றியக்குழு துணைத்தலைவர் மீது ஒன்றியக்குழு தலைவர் என இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் முறைகேடுகள் செய்ததாக மாறி மாறி புகார் தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆறு மாதங்களாக ஒன்றிய குழு கூட்டம் முறையாக நடைபெறாமல் உள்ளதால், எவ்வித தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவது இல்லை. இதனால் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இயலாமல் ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி கிடப்பில் உள்ளதாக ஒரு சில  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஏரியூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வது இது தொடர்ந்து இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment