காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் நுண்கதிர் (எக்ஸ்ரே) வாகனத்தை ஆட்சியர் துவக்கிவைத்தார். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, September 2, 2021

காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் நுண்கதிர் (எக்ஸ்ரே) வாகனத்தை ஆட்சியர் துவக்கிவைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக காசநோய் கண்டறியும் டிஜிட்டல் நுண்கதிர் (எக்ஸ்ரே) வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் இன்று (02.09.2021) தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக காசநோய் கண்டறியும் நடமாடும்நுண்கதிர் (எக்ஸ்ரே) வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேகலச்சின்னம்பள்ளி, சூளகிரி, ஓசூர், தளி, கெலமங்கலம், பாரூர், சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி, வேப்பனஹள்ளி, பர்கூர் ஆகிய பகுதிகளில் 02.09.2021 முதல் 28.09.2021 வரை எக்ஸ்ரே வசதியுடன் கூடிய Mobile Van மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் டிஜிட்டல் நுண்கதிர் (எக்ஸ்ரே) மூலம் சளி பரிசோதனை செய்யப்படுகிறது. 

மேலும், காசநோய் கண்டறியப்பட்டால் இலவசமாக 6 முதல் 18 - ம் தேதி வரை மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், காசநோய் பயனாளிகளுக்கு மாதம் ரூ.500 வீதம் 7 மாதங்களுக்கு ரூ.3500 ஊக்கத்தொகை சிகிச்சை காலம் வரை வழங்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளுக்கு வரும் எக்ஸ்ரே வசதியுடன் கூடிய Mobil Van மூலம் தங்கள் உடல்நிலையை பரிசோதனை செய்துபயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர்(நலப்பணிகள்) மரு.பி.பரமசிம், துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) மரு.வி.கோவிந்தன், துணை இயக்குநர் காசநோய் (பொறுப்பு) மரு.எ.சுகந்தா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.டி.துறைமுருகன், எ.ஷெரீப் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment