இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் 100 ரூபாய் எரிபொருளுக்கு 1 ரூபாய் சேமிப்பு திட்டம் கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு ரூபாய் சேமிப்பு திட்டம் எச்.பி.பே செயலி மூலம் அனைவரும் பதிவிறக்கம் செய்தனர்.
மேலும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து சூளகிரி இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன சார்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சூளகிரி கிளை மேலாளர் திரு. ராமகிருஷ்ணன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன கிருஷ்ணகிரி மாவட்ட துணை மேலாளர் அனுராஜ், மற்றும் பங்குசந்தை மேலாளர் அமித் சேலம் ஆகியோர் கலந்துகொண்டனர்
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நுழைவு பரிசு, முகவசம் , தேனீர் மற்றும் சமூக இடைவெளியில் நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் எச்.பி. ஒரு ரூபாய் சேமிப்பு திட்டத்தை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வரவேற்க்க கூடிய திட்டம் என அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் மகிழச்சியடைந்தனர்
No comments:
Post a Comment