தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் திமுக அரசின் 100 நாள் சாதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடப்பட்டது. திமுக அரசு 100 நாள் சாதனை தினத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நான்கு ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் 4,000 ரூபாய் தொடக்ககாலத்தில் நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் நிறைவேற்றப்பட்டது. 10.5 வன்னியருக்கு இட ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டது. மக்களை நாடி மருத்துவ திட்டம் தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை திட்டம் செயல்படுத்தியது உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதை ஒட்டி தர்மபுரி நான்கு ரோடு பேருந்து நிலையங்களில் திமுக மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் நகர கழக பொருளாளர் அன்பழகன் தங்கமணி ராஜா ரவி முல்லைவேந்தன் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Saturday, August 14, 2021
New
தருமபுரி திமுக சார்பில் அரசின் 100 நாள் சாதனை கொண்டாட்டம்.

About News Desk
Newer Article
தமிழ்நாடு அரசு சாலை பணியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
Older Article
சூளகிரி இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் எச். பி. பே. அறிமுகம்.
Product Tags:
தருமபுரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment