கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.பாஸ்கரன் தலைமை வகித்தார.மாவட்டச் செயலாளர் ஜி.ரதி வரவேற்றார். நிர்வாகிகள் செந்தில், பரமசிவம், கிருஷ்ணன், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.அர்ச்சுனன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்.நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இஎல் சரண்டர் மற்றும் டிஏ வை வழங்க வேண்டும்.சாலைப் பணியாளர்களின் 41- மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைபடுத்த வேண்டும்.காலிப் பணியிடங்களில் ஒப்பந்த பணியாளர்கள் நிரப்பப்படுவதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்த வேண்டும்.
அங்கன்வாடி திட்டத்தில் பணியாற்றி பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் முந்தைய பணி காலம் முழுவதையும் ஓய்வூதியத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.அங்கன்வாடி பணியாளர்களுக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment